காரைக்கால் கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

6 Sri Lankans arrested for fishing in Indian waters

6 Sri Lankans arrested for fishing in Indian waters

 தமிழக கடலோர காவல்படையினர் ‘விஸ்வாந்த்’ கப்பலில் கடந்த 25–ந்தேதி காரைக்கால் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டனர். இலங்கை மீனவர்களுடன் அந்த படகை மடக்கிப்பிடித்த கடலோர காவல்படையினர் நேற்று சென்னை துறைமுக போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.துறைமுக போலீசார், படகில் இருந்த இலங்கை மீனவர்களான ஆண்டனிபெர்னாண்டோ, பெரேசா, சுனஸ்லக்மல், இன்டிகா லட்சுமணன், மகேஷ் சுரஞ்சன், தினேஷ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தமிழக கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் கைதான 6 பேரையும் எழும்பூரில் உள்ள மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து 6 பேரையும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு சென்னை துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

6 Sri Lankans arrested for fishing in Indian waters

Six Sri Lankans have been arrested by the Indian Coast Guard for allegedly fishing in Indian waters. Coast Guard ship ICGS Vishwast spotted a Lankan boat ‘Dulaj Lakmal’ engaged in illegal fishing some 120 nautical miles northeast of Chennai coast, yesterday, a release said. The six Lankan nationals on board were arrested under various sections of the Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act, 1981 and fish catch weighing 450 kg has been seized.

Related posts