இத்தாலியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலை மீட்பு

Costa Concordia: Stricken ship set upright in Italy

Costa Concordia: Stricken ship set upright in Italy

கிக்லியோ போர்ட்டோ: இத்தாலி கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி கோஸ்டா கன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் இத்தாலியின் கடற்கரை கிராமமான டஸ்கன் தீவு அருகே வந்தது. கப்பலில் 4,200 பயணிகள் இருந்தனர். கடற்கரைக்கு அருகில் வந்தவுடன் பாறையில் மோதி கப்பல் கவிழ்ந்தது. அப்போது கடலில் மூழ்கி 32 பேர் இறந்தனர். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்தக் கப்பலை மீட்கும் பணியில் கப்பல் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலுமாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராட்சத கிரேன்கள், ஹைட்ராலிக் இயந்திரங்கள், இழுவை கப்பல்களை பயன்படுத்தி கப்பலை நிமிர்த்தும் பணி நடந்து வருகிறது. அப்படியே கப்பலை உருட்டி, தரையில் பதிந்திருக்கும் பகுதியை மேலே கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதற்காக 20 ஆயிரம் டன் சிமென்ட் மூட்டைகளை கப்பலுக்கு கீழே  இன்ஜினியர்கள் அடுக்கியுள்ளனர். கப்பல் மீட்கப்பட்டதும் மீண்டும் பயன்படுத்தப் போவதில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பலை மீட்டு அதை உடைக்கும் துறைமுகத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கப்பலை மீட்க பல நூறு கோடி ரூபாய் செலவாகியுள்ளது. ஸ்கிராப் ஆக அதை உடைத்து அதன் மூலம் அந்தத் தொகையை பெற உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Costa Concordia: Stricken ship set upright in Italy

Engineers in Italy have succeeded in setting the cruise ship Costa Concordia upright, 20 months after it ran aground off the island of Giglio.

Related posts