உலகில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிப்பு

One third of food wasted, costs world economy $750 bn: UN ஒவ்வொரு ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு உணவு பொருட்கள் வீணாக போவதால், உலகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிக்கபடுவதாக ஐ.நா.சபையின் விவசாய மற்றும் உணவு நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட அய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். அந்த ஆய்வின்படி, வருடந்தோறும் சுமார் 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறதாம். வீணாக்கப் படும் உணவுப் பொருட்களின்…

Read More

தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலை தாக்குதல்

Afghanistan Taliban kills two in attack on US consulate   ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தின் மீது தலிபான்கள் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். தலிபான்களின் இந்த பயங்கர தற்கொலைபடை தாக்குகுதல் மிகுந்த  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை ஆப்கான் நேர படி  5.30 மணியளவில், தலிபான் தீவிரவாதிகள் திடீரென ஒரு டிரக்கை வெடிக்கச் வைத்து, அங்கே பாதுகாப்புக்காக இருந்த இராணுவத்தினரின் மீது சரமாரியாகச் சுட்டனர். பாதுகாப்பு படையினர் அவர்களை எதிர்த்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக ஹெராத் மாகாண ஆளுநர் சையது பஷுல்லா அறிவித்துள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென அமெரிக்க பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மேரி ஹர்ப் தெரிவித்துள்ளார். மேலும் அதில் 2 நபர்கள்…

Read More

41 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட தென் கொரிய நபர் ஊர் திரும்பியுள்ளார்

Fisherman kidnapped by North Korea flees after 40 years கடத்தப்பட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு நபர் தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் தாயகம் திரும்பியுள்ளார். தென் கொரியாவை சேர்ந்த ஜீயான் வோக்-பியோ என்பவர் கடந்த 1972ம் ஆண்டு 25 பேருடன் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வட கொரியாவுக்கு கடத்தப்பட்டார். இதன்பின்பு இவரைப் பற்றி எவ்வித தகவலும் இல்லாததால், நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் தவித்தனர். இந்நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். தற்போது இவருக்கு 68 வயதாகிறது, இவரை பார்த்த உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதனையடுத்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித விவரமும் வெளியிடப்படவில்லை. Fisherman kidnapped by North Korea flees after 40 years A South Korean fisherman kidnapped by the North Korean navy…

Read More

கொலம்பியா விமான நிலையத்தி 2கி கோகைன் கடத்த முயன்ற பெண் கைது

Woman caught trying to smuggle 2kg of cocaine in fake pregnancy bump கொலம்பியா விமான நிலையத்தில் கர்ப்பிணி போல் நடித்து, 2கி கோகைன் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடாப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் மீது, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது. அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர் அதிகாரிகள். அப்போது கர்ப்பம் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை அப்பெண் கூறியுள்ளார். இதனால், பெண் அதிகாரி ஒருவர் மூலம், அப்பெண்ணை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர் அதிகாரிகள். அதன்படி, அப்பெண்ணை சோதனை செய்த அதிகாரி அப்பெண்ணின் வயிறு மிகவும் கடினமாகவும், அதேசமயம் குளிர்ந்தும் காணப்படுவதாக…

Read More

நாசா விண்வெளியில் கீரைகள் பயிரிட திட்டமிட்டுள்ளது

Nasa set to grow lettuce in space  வீரர்கள் உணவுக்காக விண்வெளியில் கீரைகள் பயிரிட நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. அதற்காக அவர்களுக்கு 450 கிராம் (ஒரு பவுண்டு எடை) உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே, செலவை குறைக்க வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிட ‘நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக காய்கறிகளும் பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய பண்ணை அமைக்கும் வசதியை உருவாக்கும் எந்திரங்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன.இந்த தகவலை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் திட்ட…

Read More

அமெரிக்க நிறுவனத்தின் தாவரப் பொருட்களை வைத்து தயாரான சைவ முட்டை

Artificial egg made from plants on sale கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தை பயன்படுத்தி சைவ முட்டை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனத்தை ஒன்றை சேர்ந்த உணவு பொருள் விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க தாவரப் பொருள்களை வைத்து நவீன செயற்கை சைவ முட்டையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சைவ முட்டையை பட்டாணி, பயறு வகைகளை கொண்ட 11 சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புளி கரைசல் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள். தற்போது இந்த செயற்கை தாவர முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. கோழி முட்டையை விட இதன் விலை 19 சதவீதம் குறைவு என்றும், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் கூறுகிறார்.மேலும்”சைவ பிரியர்கள் முட்டை…

Read More

சென்னையில் தொழில் அதிபர் மகனைக் கடத்திய கும்பல் கைது

Kidnapped business man rescued   சென்னை ஐஸ்அவுஸ் கபூர்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவரது மகன் யாசர்அராபத் (வயது 25). இவர், பல்லாவரத்தில் தோல் கம்பெனி நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தார். அப்போது, 3 மர்ம நபர்கள் இவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்தார். மற்ற இருவர் சாதாரண உடையில் காணப்பட்டனர். இந்த மர்ம நபர்கள், வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அராபத்தை காரில் அழைத்துச் சென்றனர். ஆனால் எந்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.  ஆனால் அராபத் வீட்டிற்கு அன்றையதினம் நள்ளிரவே போனில் பேசிய நபர் ஒருவர், அராபத்தை கடத்தி சிறை வைத்துள்ளோம் என்றும், ரூ.1 கோடி…

Read More

மாஸ்கோ மருத்துவமனையில் தீ விபத்து 37 பேர் பலியாயினர்

37 dead after fire at Russian psychiatric hospital ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 37 பேர் பலியாகினர். ரஷ்யாவின் நோவ்கோரோட் மாகாணத்தில் லூகா என்ற ஊரில் மனநோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு 60-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அது பயங்கரமாக எரிந்து அடியோடு தரைமட்டமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் மருத்துவ ஊழியர் ஒருவர் ஆவார். மேலும் 27 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.…

Read More

14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஷ்கர் எல்லையில்

14 Naxals killed in an encounter with police in Odisha ஒடிசாவில் சத்தீஷ்கர் மாநில எல்லையில் உள்ள மால்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு படையினரும், மாவட்ட தன்னார்வ படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கினார்கள். கடுமையான துப்பாக்கி  சண்டையில் மாவோயிஸ்டகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட் ஆவார். அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடி பொருள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மே 25-ந்தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள்…

Read More

தஞ்சை பெரியகோவில் 63 வயது யானை வெள்ளையம்மாள் உயிரிழந்தது

tanjore temple elephant dies நடிகர் திலகம்   சிவாஜி கணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு வெள்ளையம்மாள் என்கிற யானையை இறைதொண்டுக்காக பரிசாக வழங்கியிருந்தார். அந்த யானை இன்று அதிகாலை  இறந்து போனது. 63 வயதாகும் இந்த யானை, பல வருடங்களாக இறைத் தொண்டு புரிந்து வந்தது.கடந்த சில மாதங்களாக தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. இந்த யானைக்கு நேற்று முழுவதும் கடுமையான மூட்டு வலி வந்துள்ளது. முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு தஞ்சை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும், வலியால் துடிதுடித்து அவதிப்பட்ட யானை, மயங்கி விழுந்து இறந்து விட்டதாகத் தெரிய வருகிறது. அப்பகுதி மக்கள் வெள்ளையம்மாள்  இறந்த சோக செய்தி கேட்டு, அனைவரும் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இன்று மாலை தகுந்த மரியாதையுடன்,…

Read More