நிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவு

CBI search results in the Ministry of Coal

CBI search results in the Ministry of Coal
CBI search results in the Ministry of Coal

மத்திய அரசுக்கு நிலக்கரி சுரங்கங்களின் நடந்த முறைகேடான ஒதுக்கீடுகளில் 1.86 லட்சம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டது என கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. சி.பி.ஐ. இது பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் நிலக்கரி ஊழல் சம்பதமான முக்கிய ஆவணங்கள் காணமல் போனதாக மத்திய அரசு தெரிவித்தது. அதனை கண்டுபிடிப்பதற்காக குழு ஒன்று உருவாக்கப்பட்டது. எனினும் இன்னும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரத்திற்குள் நிலக்கரி ஊழல் சம்பதமான அவணங்களை சி.பி.ஐ க்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் பல முறை நினைவு படுத்தியும்  ஆவணங்களை கொடுக்காததால், சி.பி.ஐ., நிலக்கரித்துறை அமைச்சகத்தில்  சோதனை செய்ய திட்டம் வகுக்கபட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய , இந்த ஆவணங்கள் அவசியம் தேவை என சி.பி.ஐ வட்டாரம் தெரிவிக்கிறது. நிலக்கரி அமைச்சகம், குறிப்பாக 2006 முதல் 2008 ஆண்டு ஆண்டிற்கு உண்டான கோப்புகளை கொடுக்க மறுக்கிறது.  பிரதமர் மன்மோகன்சிங்,  இந்த காலகட்டத்தில்தான் இந்த அமைச்சகத்தை நடத்தி வந்தது குறிப்பிடதக்கது.  எனவே அவரை காப்பாற்றுவதர்க்காகவே அந்த கோப்புக்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பா.ஜ.க குற்றம் சட்டி வருகிறது. இது குறித்து  நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் “சி.பி.ஐ. கேட்கும் கோப்புகள் வேறு எங்கு உள்ளது என தேடி வருகிறோம்” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை ஒருவேளை திருடப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.  எனினும் இந்த சாக்கு போக்கை நம்ப மறுக்கும்  சி.பி.ஐ. வரும் 15 ம் தேதிக்குள்  கோப்புக்கள் கொடுக்கபடாவிட்டால் நிலக்கரி அமைச்சகத்தில் அதிரடியாக சோதனை செய்ய திட்டமிடபட்டுள்ளது. இந்த கடுமையான சோதனை மூலமாக காணாமல் போன கோப்புகளை உறுதியாக கண்டுபிடித்து விடும் சாத்திய கூறுகள் இருக்கிறது என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

CBI search results in the Ministry of Coal

Related posts

Comments are closed.