ரஞ்சிதா-நித்தியானந்தா வீடியோ தனியார் Tv மன்னிப்பு கேட்க நீதிபதி உத்தரவு

Private television channel apologize for wrong news: Court Order

நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா தொடர்பாக தவறான செய்தி மற்றும் வீடியோவினை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னையும், நித்யானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும் இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி என்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் அந்த வீடியோவானது பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும், மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. மேலும் தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் தொலைக் காட்சி வருகிற 9ம் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Private television channel apologize for wrong news : Court Order

Private television channel apologize for wrong news : Court Order

Private television channel asked to apologize for wrong news, Court orders regarding Nithyananda and Actress Ranjitha Relationship News broadcasted

Related posts