கருப்பைபுற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்

Australian team creates IVF history with ovarian tissue transplant ஆஸ்திரேலியாவில் கருப்பை புற்றுநோய் பாதித்தால் தாயாக இயலாத நிலையில் இருந்த ஒரு பெண்ணிற்கு புதிய மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்ததால் அவர் தற்போது இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பமாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் புற்றுநோய் பாதித்தது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டதால் வலியால் எப்போதும் தாயாக முடியாத நிலை ஏற்பட்டது.. 26 வயதான அப்பெணிற்கு மருத்துவர்கள் உதவ முயன்றனர். அதன்படி, வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது வெட்டியெடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.  அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு கருமுட்டை வளருவதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர். கருப்பை திசு மாற்று சிகிச்சைக்கு பிறகு சில வருடங்களின் தொடர் முயற்சிக்குப் பின், தற்போது வலி 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவர் இரட்டைக்…

Read More

பாலியல் குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ சிறையில் தற்கொலை

Cleveland kidnapper Ariel Castro found hanging in prison cell மூன்று பெண்களைக் கடத்தி வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 1000 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற கைதி சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்கா, ஓஹையோ மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஏரியல் காஸ்ட்ரோ (53) என்ற ஆசாமி, கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கடத்திச் சென்று வீட்டுச்சிறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏரியலின் கட்டுப்பாட்டில் சிறை பட்டுக்கிடந்த அவர்களில் ஒரு பெண், கடந்த மே மாதம் அங்கிருந்து தப்பினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியல் கைது செய்யப்பட்டான். பின்னர், வீட்டில்…

Read More

இந்திய ரிசர்வ் வங்கியை பொறுப்பேற்கிறார் தமிழரான ரகுராம் ராஜன்

Raghuram Rajan takes over as RBI Governor ரகுராம் கோவிந்த் ராஜன் மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய கவர்னர் பதவிக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி…

Read More

ஐரோப்பாவிலேயே மிக பெரிய நூலகத்தை மலாலா யூசஃபாய் திறந்தார்

Malala Yousafzai opens Europe’s biggest library in UK தாலிபான்களால் தலையில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப்சாய் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொது நூலகத்தை திறந்து வைத்துள்ளார். தாலிபான்களால் சுடப்பட்டு தலையில் குண்டடிபட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசப்சாய்(16) சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது. தற்போது மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிர்மிங்காம் பகுதியில் 189 மில்லியன் பவுண்ட் செலவில் பொது நூலகம் கட்டப்பட்டது. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நூலகம் இது தான். இந்த நூலகத்தை மலாலா திறந்து வைத்தார். பிர்மிங்காம் தான் இங்கிலாந்தின் இதயத்துடிப்பு. இந்த…

Read More

விருதுநகர் காதல் ஜோடி குண்டாறு வனப்பகுதியில் தற்கொலை

A love pair from Viruthunagar committed suicide in Gundaru forest விருதுநகரைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று குண்டாறு வனப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டது. செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு நீர்த்தேக்கம் வனப்பகுதியில் காதல் ஜோடி ஒன்று இறந்துகிடப்பதாக செங்கோட்டை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி ஏ.எஸ்.பி.அரவிந்தன், சப்.இன்ஸ்பெக்டர் பவுன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் விருதுநகர் பாலன் நகரைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் செந்தில்குமார் என்று தெரிய வந்தது. ஆனால் அந்த பெண் எந்த ஊரை சார்ந்தவர் என்று தெரியவில்லை. இறந்து கிடந்த பெண், மதுரை எஸ்.கோட்டைப்பட்டியில் இயங்கிவரும் பராசக்தி ஆசிரியர் பயற்சி பள்ளியில் டி.எட்.படித்துவரும் ராமதேவி என்பது பின்னர் தெரிய வந்தது. இருவரும் காதலித்து வந்ததாகவும், காதலில் பிரச்சினை ஏற்பட்டதால், குளிர்பானத்தில்…

Read More

ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய அரசு தடை

Indian Government may ban use of Gmail, Yahoo in official communications ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையதள சேவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. தனியார் இணையத் தள சேவைகளை பயன்படுத்தி அனுப்பப்படும் அரசு தகவல்கள் மர்ம நபர்களால் திருடப்படுவதாக தெரிய வந்தது. மேலும் சில இ-மெயில் தகவல்களை சில நாடுகள் கடத்தி பிறகு முடக்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அரசு தொடர்பான தகவல்களை இ- மெயில் மூலம் அனுப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையத்தள சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் அனுப்பும் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாகூ இணையத் தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள…

Read More

ஃப்ரீஸருக்கு பதிலாக 11 வயது மகளை விற்ற தாய்

Argentine woman swaps 11 year old daughter for a freezer அர்ஜெண்டினாவில் ஒரு ஃப்ரீஸருக்காக பெற்ற மகளை தாயே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் பாப்லா செசரினா. இவருக்கு வயது 30. நான்கு குழந்தைகளின் தாயான இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். விசாரணையின் போது அச்சிறுமி, ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் தாய் என்னை ஒருவரிடம் விற்றுவிட்டார். அவர்கள் என்னை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பினர். நான் இங்கு பாலியல் தொந்தரவு, மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளேன் எனத்தெரிவித்து போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  இதனையடுத்து,…

Read More

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்

Woman accused hides $5,000 in a body part அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் அவரது காதலனிடமிருந்து திருடிய பணத்தை ஏடாகூடமான இடத்தில் வைத்து அவதிப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் . 43 வயதான இவர் அவரது காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்து வைத்துள்ளார். பிறகு அந்த பணத்தை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதலரிடமிருந்து கிறிஸ்டி 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம்) திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே…

Read More

ஜப்பான் மற்றும் கனடாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின

Earthquake in Japan and Canada ஜப்பான் மற்றும் கனடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 400 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. கனடாவில் வான்குவர் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில டுக்கம் காரணமாக…

Read More

இளைஞர்களை அடிமையாக்கும் இ-சிகரெட்: உலக சுகாதார நிறுவனம்

e cigarettes new generation addicts இந்தியாவில் இ- சிகரெட்டுக்கு தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை. பார்க், பீச், ரயில், பஸ், திரையரங்கு… எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை, அதிக அளவில் புகை இல்லை. சிகரெட் பிடித்து முடித்ததும் சட்டைப் பையில் போட்டு எடுத்தும் செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதகம் ஏற்படுத்தாத சிகரெட்!’ – இ-சிகரெட் நிறுவனங்களின் ஈர்ப்பு அழைப்பு இது. அது என்ன இ-சிகரெட்? ‘புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்’ என்கிறார்கள். இந்நிலையில் இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும்…

Read More