நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 50 மாணவர்கள் படுகொலை

50 Students Killed in Nigerian Terrorist Attack நைஜீரியாவில்  தீவிரவாதிகள் கல்லூரி மாணவர்கள்  விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த 50 மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தனர். நைஜீரியாவில் குஜ்பா எனும் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை கல்லூரி மாணவர் விடுதிக்குள் திடீரென நுழைந்த தீவிரவாதிகள், உறங்கிக்கொண்டிருந்த  மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதல் நடத்தினார்கள். அலறியடித்துக் கொண்டு உயிருக்கு பயந்து ஓடிய கல்லூரி மாணவர்களை துரத்தி சென்று தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்கள். பல மாணவர்கள் ஓடி சென்று அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டார்கள், எனினும் தேடிச்சென்று அவர்களை தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 50 மாணவர்கள் இறந்தனர். 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள். சம்பவம் பற்றி அறிந்தவுடன் ராணுவமும், காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்றார்கள். அதற்குள் அந்த  தீவிரவாதிகள் வாகனங்களில் ஏறி தப்பினர்.  அந்த கல்லூரிக்கு வந்த…

Read More

அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் போதைப் பொருள்

3-year-old US girl brings 14 bags of pot to school அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்லம் பகுதியில் ஒரு பள்ளியில் படிக்கும் மூன்று வயது நிரம்பிய ஒரு சிறுமி தினமும் செல்வது போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த குழந்தையின் பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு காரணம் அந்த குழந்தையின் பையில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனும் போதைப் பொருள் இருந்தது. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு உடனே தகவல் அளித்தனர். அவர்களும் உடனே பள்ளிக்கு விரைந்து சென்று போதைப் பொருளை பறிமுதல் செய்தார்கள். அந்த சிறுமியிடம் விசாரணை செய்து அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியினுடைய தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் அந்த போதைப் பொருளை சிறுமியினுடைய…

Read More

வண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்

a mini lorry driver died while driving the vehicle ஈரோடு மாவட்டம், பெருந்துறை பக்கமுள்ள  உத்தண்டி கிராமம், கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், வயது- 48. அவரது மனைவி கீதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மாரப்பன், மினி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சென்னையிலிருந்து, கோயமுத்தூருக்கு, பிளாஸ்டிக் சீட்களை தன்னுடைய மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். சனிக்கிழமை இரவு சங்ககிரி அருகே உள்ள விராச்சி பாளையம் அருகே சென்றபோது, மாரப்பனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், லாரியை சாலையோரம் நிறுத்தியவர், வண்டியை ஆஃப் செய்ய முடியாமல், பிரேக்கை காலால் அழுத்தி பிடித்த நிலையில் உயிரிழந்தார். இரவு முழுவதும், வண்டி ஓடிக்கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலை, வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்தை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து, டிரைவர் மாரப்பனை…

Read More

8 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த நைஜீரிய நபர் டெல்லியில் கைது

nigerian caught with cocaine worth rs 40 crore at 5 star hotel in delhi டெல்லியில் நைஜீரிய நாட்டவர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ எடையுள்ள சுமார் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று நைஜீரிய நாட்டவர் ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவரது உடமைகள் வேறொரு விமானத்தில் வந்துள்ளன. பின்னர் விமான நிலையத்துக்கு வந்து உடைமைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஹோட்டலில் சேர்ப்பித்துவிடுமாறு விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய உடைமைகளுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு நைஜீரிய நாட்டவரிடம் உடைமைகளை கொடுத்து சோதனை…

Read More

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்கள் வாழ்க்கை சிக்கல்

Failed marriages with Pak nationals leave 226 Indian women in the lurch வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள். விவாகரத்து மற்றும் கணவரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவர்கள் தங்களது பிறந்த மண்ணுக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். எனவே, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே உருவாகியுள்ள பிரச்சினையில் அவர்களை வைத்து பராமரிப்பதில் குடும்பத்தினரும், நண்பர்களும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.அதனால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது. எனவே, நிரந்தர இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நீண்ட…

Read More

விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பிரிட்டன் நிறுவனம்

Thompson & Morgan launches novel tomato/potato dual plant   ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம். மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல்,…

Read More

பஞ்சாபில் இளம்பெண்ணை கொலை செய்த குடும்பம்

 Disturbing Pics of Cops Recovering Half-Burnt Corpse of Girl Killed by Parents for Having an Affair   பஞ்சாபில் ஒரு இளம்பெண்ணை கௌரவ கொலை செய்த குடும்பத்தினர், அவரது சடலத்தை எரிக்க முயன்றப்போது, போலீசார் பாதி எரிந்த சடலத்தை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மௌர் குராத் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஹர்ஜிண்டர் கவுர், இவர் ஜக்சிர் சிங் என்னும் நபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொடூரமாக கொலை செய்தனர். தனது காதலி குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், ஜக்சிர் சிங் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பெண்ணின் வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அவர்கள் அப்பெண்ணை கொலை செய்ததும், அவரது சடலத்தை…

Read More

காரைக்கால் கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

6 Sri Lankans arrested for fishing in Indian waters  தமிழக கடலோர காவல்படையினர் ‘விஸ்வாந்த்’ கப்பலில் கடந்த 25–ந்தேதி காரைக்கால் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டனர். இலங்கை மீனவர்களுடன் அந்த படகை மடக்கிப்பிடித்த கடலோர காவல்படையினர் நேற்று சென்னை துறைமுக போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.துறைமுக போலீசார், படகில் இருந்த இலங்கை மீனவர்களான ஆண்டனிபெர்னாண்டோ, பெரேசா, சுனஸ்லக்மல், இன்டிகா லட்சுமணன், மகேஷ் சுரஞ்சன், தினேஷ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தமிழக கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான 6 பேரையும் எழும்பூரில் உள்ள மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து 6…

Read More

பிரான்ஸ் நாட்டு வாலிபர் இந்திய புதையலை கண்டுபிடித்துள்ளார்

Climber finds treasure from Indian air crash on Mont Blanc   இந்திய நபருக்கு சொந்தமான புதையலை ஆல்ப்ஸ் மலையில் பிரான்ஸ் நாட்டு வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது. அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதையலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைத்துள்ளார். அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950…

Read More

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது

no fuel for traffic violators. No helmet no petrol new rule in Gujarat அகமதாபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை கையாள போக்குவரத்து காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் படி போக்குவரத்து காவல்துறையும், பெட்ரோல் பங்க் நிறுவனமும், இணைந்து போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என முடிவெடுத்து உள்ளார்கள். வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறை படுத்தபடவிருக்கும் இந்த விதிமுறைபடி, உரிமம் இல்லாத ஓட்டுனர்கள், இருக்கை பெல்ட்களோ, ஹெல்மெட்டோ அணியாதவர்கள் ஓட்டிவரும் வாகனங்கள், ஹெல்ப்லைன் எண்கள் எழுதப்படாத ஆட்டோக்கள், ஆடம்பரமான எண் பலகைகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கண்ணாடிகளில் அடர்த்தியான பிலிம் பேப்பர் ஒட்டப்பட்ட கார்கள் போன்றவற்றிற்கு எரிபொருள் அளிக்க வேண்டாமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்…

Read More