அக்டோபர் மாதம்15ம் தேதிக்குள் மகளிர் வங்கிகள் துவக்க முடிவு

Women banks decided to start before October 15

முழுவதும் பெண்களால் இயக்கப்படும் மகளிர் வங்கிகள்  அக்டோபர் மாதம்  15ம் தேதிக்குள் சென்னையில் திறக்கப்படும்  என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்  நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, நாட்டிலேயே புதுமையாக முழுவதும் பெண்களால் இயக்கப்படும் , பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிர் வங்கிகள் துவக்கப்படும் என அறிவித்தார். முதற்கட்டமாக சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, இந்தூர் மற்றும் கவுகாத்தி நகரங்களில், மகளிர் வங்கிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பார்லிமென்டில் சமீபத்தில் 1,000 கோடி ரூபாய் துவக்க முதலீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மகளிர் வங்கி துவக்குவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் சென்னை உட்பட ஆறு இடங்களில் மகளிர் வங்கிகள் துவக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நடப்பு நிதியாண்டு முடிவடையும் போது மகளிர் வங்கிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கியை துவக்குவதற்கான முறைப்படி ஒப்புதலை ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் வழங்கியுள்ளது. இந்த வங்கியின் தலைமையகம் டில்லியில் இருக்கும். ஊழியர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். கணக்கு துவக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஆண்களும் கணக்கு துவக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Women banks decided to start before October 15

Related posts