அவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

Vijayakanth gets exemption from appearing in court

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர், இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுதரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து அவதூறாக பேசியதாக, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஊர்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மூன்று வழக்குகளிலும் வெவ்வேறு தேதிகளில் ஆஜராக விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மூன்று வழக்குகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விஜயகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மூன்று வழக்குகளில் இருந்தும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்தனர்.

Vijayakanth gets exemption from appearing in court

Related posts