இது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி

I can only laugh at that, said former captain Ganguly on Eng players urinating on the London Oval pitch

urinating on the London Oval pitch

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதை இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து கொண்டாடினர். அப்போது ஜாலியாக இருந்ததுடன், பிட்ச் மேலேயே சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்தினர், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கங்குலி கூறுகையில், இங்கிலாந்து வீரர்களின் செயலை படித்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால் இதற்காக தண்டனையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்து. எச்சரித்தோ அல்லது அபராதம் விதித்தோ விட்டு விட வேண்டியதுதான், வேறு என்ன செய்ய முடியும். அவர்கள் முதிர்ச்சியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் கிடையாது. எனவே இதற்கு தண்டனை தேவை என்று நான் கருதவில்லை. ஏதோ ஜாலியில் சில்மிஷமாக நடந்து கொண்டு விட்டனர். நான் கூட லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை சட்டையைக் கழற்றி வெற்றியைக் கொண்டாடினேன். அப்போது எல்லாமே கட்டுக்குள்தான் இருந்தது. அதேபோல தென் ஆப்பிரிக்க அணியை, தென் ஆப்பிரிக்காவில் வீழ்த்தியபோதும் டிரஸ்ஸிங் ரூமில் எங்களது வீரர்கள் அதகளப்படுத்தினர். ஆனால் உள்ளேதான் அது நடந்தது. நமது வீரர்களில் சிலர் மது அருந்தினர். சிலர் பெப்சி மட்டும் குடித்தனர். சிலர் குடிக்கவே இல்லை. கொண்டாட்டம், உற்சாகம், ஜாலி இருந்தது. ஆனால் தப்பாக எதுவும் நடக்கவில்லை. காரணம், அப்போது அணித்தலைவராக இருந்தவர் டிராவிட். அளவோடு இருந்தால் பிரச்சினை வராது என்று தெரிவித்துள்ளார்.

I can only laugh at that, said former captain Ganguly on Eng players urinating on the London Oval pitch

Related posts