போதை பொருளால் எனது வாழ்க்கை பறிபோகிறது: மைக் டைசன்

உலகின் பிரபல முன்னாள் நட்சத்திர ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், போதை பொருள் மற்றும் பொறுமை இன்மை காரணத்தால் என் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருக்கின்றது என வேதனைப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90களில் விமர்சனத்துக்குள்ளான அவர், 1992ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருட சிறைத்தண்டனைக்கு பின்பு அவர் விடுதலையானார். அதனையடுத்து மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் மைக் டைசன் கலந்துகொண்டார். 1996ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார். அடுத்து உலக குத்துச்சண்டை அசோசியேஷன் பட்டத்திற்காக 1997ம் ஆண்டு நடந்த போட்டியில் மைக் டைசன் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதினார். இதில், இவாண்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து மைக் டைசன் துப்பினார். இதனால் போட்டிகளிலிருந்து மைக் டைசன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மகளின் இறப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய மைக் டைசன் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானார். இந்நிலையில் தனது வாழ்வு குறித்து மைக் டைசன் கூறுகையில், நான் பல்வேறு கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். நான் மன்னிக்கப்பட வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புவதுடன் நிதானமான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். நான் சாக விரும்பவில்லை என்றும் ஆனால், பல்வேறு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையான நான் சாவின் விளிம்பில் நிற்கிறேன் எனவும் கூறினார்.

200px-Mike_Tyson_at_SXSW_2011

article-2401517-1B725E4D000005DC-168_634x413

வீடியோ இணைப்பு :

Mike Tyson says he’s on the verge of death after admitting he is a ‘vicious alcoholic’

MIKE Tyson said he is a “vicious alcoholic” and on the verge of death after years of lying about his drug and alcohol use. The former heavyweight made the revelation during a press conference in Verona, New York, to promote ESPN’s Friday Night Fights. According to the Daily Mail, Tyson told the presser: “I’m a bad guy sometimes…I did a lot of bad things, and I want to be forgiven… I wanna change my life, I wanna live a different life now. I wanna live my sober life. “I don’t wanna die. I’m on the verge of dying, because I’m a vicious alcoholic.” Tyson went on to say he had spent the last six days sober, a situation he described as “a miracle”. “I’ve been lying to everybody else that think I was sober, but I’m not. This is my sixth day. I’m never gonna use again.” Tyson has had a highly public battle with drug and alcohol addiction, having spent three separate stints in rehab. However, in an interview last year he claimed he had been sober for three years. In the press conference he also admitted he had contemplated suicide five years ago but that the loss of his four-year-old daughter, Exodus, who died in 2009 after strangling on a cord while playing on a treadmill, had acted as a wake-up call. “I didn’t think I’d be here much longer,” he said. “I was planning on killing myself. I was overdosing every night. I couldn’t believe it – that I was waking up. Living life is different for me.”

Related posts