இலங்கை ஊடகவியலாளர் வீட்டில் குற்றக்கும்பலுடன் போலீஸ் மோதல்

Sri Lankan editor held at knifepoint as home searched

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனாலும், போலீஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கொள்ளையர்கள் மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டியின் டிக்மன் வீதியிலுள்ள ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழு, அவரின் மகளையும், தாயையும் கத்திமுனையில் வைத்துக் கொண்டு பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் எங்கே என்று கேட்டுள்ளனர். குறித்த சமயத்தில் மந்தனாவின் கணவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வீட்டுக்கு திரும்பியதும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்கிறது என்று உணர்ந்து போலீஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த போலீஸார் ஆயுதம் தாங்கிய கொள்ளைக்குழுவை துப்பாக்கி பிரயோகம் செய்து பிடித்தது. இதில் கொள்ளையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இன்னும் சிலர் காயமடைந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தொலைபேசிகளின் இணைப்பை துண்டித்ததுடன், மகளையும், தாயையும் கத்தி முனையில் வைத்துக் கொண்டு தன்னிடம் “உன்னை கொல்லவும்- கடத்தவும் உத்தரவு உள்ளதாக“ குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.

Sri Lankan editor held at knifepoint as home searched

Sri Lanka police shot and killed one. They are suspect of a robber gang. They have broken into a local journalist’s house. That was in the pre-dawn hours of Saturday. And the police arrested the others. Five people believed to be of a robber gang. They have entered the journalist’s residence in the early hours of today. The robbers threatened to kill the occupants who had managed to report the robbery to the police via the 119 – emergency hotline. The police have arrived in time to surround the residence and thwart the robbery. However, during the confrontation ensued with the robbers, the police have opened fire when one suspect stabbed a police officer injuring him seriously, local media reported. A suspect who was shot during the melee succumbed to his injuries at the hospital while three police officers were also injured and admitted to the Colombo National Hospital. The journalist, Mandana Ismail Abeywickrema, who is an associate editor of local newspaper Sunday Leader and the president of the Sri Lanka Journalists Trade Union, and her family were not hurt in the incident.

Advertisement: Visit http://www.bestsquarefeet.com/ for best Buy and sell of properties in chennai

Related posts