சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்:1300 பொதுமக்கள் பலி

1300 civilians killed in Syria

சிரியாவில் அரசுப்படையினர் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அயர்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் நேற்று இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் நுரையீரலுக்குள் ஊடுருவிய நச்சுப் பொருட்கள், நரம்பு மணடலத்தை பாதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர்.

இதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அறியாமலேயே பலர் மரணத்தை தழுவியுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து ஆராயவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கூடுகிறது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரிய அதிபர் பஷீர் அல்ஆசாத் பதவி விலகக்கோரி புரட்சி படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

1300 civilians killed in Syria

‘Chemical’ attack by Assad regime in Syria kills 1300 in ‘massacre’, the opposition says. Disturbing footage has emerged from Syria alongside claims that hundreds of people died in chemical weapons attacks in Damascus. Witnesses claim poisonous gas was used, but the Syrian army and the government deny the reports. A weapons inspection team from the UN is already in Syria to check out claims of earlier alleged attacks. It has not yet commented on the allegations.

For More News accross the globe, just visit http://www.veedooorealty.com/

Related posts