பெரிய புத்தகம் சிறிய உருவம் சாதனை படைத்த ராஜஸ்தான் பெண்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், “மெகா’ சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார்.

“இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம் நன்றாக உள்ளது. ஜெய்ப்பூர் மக்கள் விருப்பத்தக்கவர்கள்’ என ஜோதி ஆம்கே தெரிவித்தார்.

இந்தப் புத்தகம் 1500 கிலோ இரும்பு, 100 லிட்டர் வண்ணச்சாயம் மற்றும் 400 கிலோ ஆளி விதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத் மற்றும் நாசிக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட 10 பேர் 4 நாள்களில் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த சாதனையைப் பாராட்டி முனி ஸ்ரீ தருண் சாகர், ஜோதி ஆம்கேவுக்கு லிம்கா புக் சாதனை புத்தக நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி ஆமதாபாதில் 25 அடி உயரம் 17 அடி அகலம் கொண்டு உருவாக்கப்பட்ட புத்தகமே சாதனையாக இருந்தது.

இது முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய புத்தகத்தின் 7ஆவது தொகுதியாகும்.

இதுவரை வெளிவந்துள்ள 6 தொகுதியும் சுமார் 60 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இப்போது வெளியாகியுள்ள மெகா சைஸ் புத்தகத்தை சிறிய வடிவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

World’s shortest woman releases biggest book in Jaipur

Related posts