பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்

Prime Minister Manmohan Singh has said that globalization is not going to abandon the policy.

டில்லியில்  ரிசர்வ் வங்கி தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய  பிரதமர் மன்மோகன் சிங் , இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் கொள்கை திரும்ப பெறப்பட மாட்டாது என்று கூறினர் . 1991-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூபாயின் மதிப்பு   கடும் வீழ்ச்சி யாக இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் அந்நிய செலவாணி விகிதம் ஒரே நிலையாக இருந்தது, தற்போது இது சந்தைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுவதால் அந்த சூழல் எழாது. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்திவிட்டாலே இது சரியாகிவிடும் என்று பிரதமர் தெரிவித்தார் .

1991ல் ஏற்பட்ட நெருக்கடியின்போது நம்மிடம் 15 நாட்களுக்கு மட்டுமே அன்னியச் செலாவணி கையிருப்பு இருந்ததாகக் கூறிய பிரதமர், இப்போது 6 முதல் 7 மாதங்கள் வரை தேவையான அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தங்கம் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு வருவது நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்றும் அதை குறைத்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என்றார்.

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக கூறிய அவர், பொருளாதார தாராளமயமாக்கலில் இருந்து இந்தியா பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

Prime Minister Manmohan Singh has said that globalization is not going to abandon the policy.

Prime Minister Manmohan singh today dismissed the possibility of a throwback to 1991 balance of payments crisis situation and reversing the path of globalisation of the economy. Prime minister said  In 1991 the country had only foreign exchange reserves for 15 days. “Now we have reserves of six to seven months. So there is no comparison. And no question of going back to 1991 crisis.”

Against the backdrop of the high Current Account Deficit (CAD) and the all-time low value the Rupee has touched, the Prime Minister was asked about fears in some quarters that the country may be witnessing a throwback to 1991 crisis when gold was pledged and the country was forced to adopt a reforms programme that put it on the path of globalisation of economy.

Related posts