சிந்துரக்சக் நீர்மூழ்கி கப்பலில் ஐந்து பேரின் உடல்கள் மீட்பு

Bodies were recovered by divers on Friday morning from the INS Sindhurakshak

மும்பையில் வெடித்து சிதறிய சிந்துரக்சக் என்ற நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பகுதிக்குள் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் என்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்து நடந்த போது, கடற்படையை சேர்ந்த 3 அதிகாரிகளும், 15 வீரர்களும் இருந்தனர். கப்பல் வெடித்த போது அதிகளவில் வெப்பம் ஏற்பட்டு, இரும்பு கதவுகள் உருகிவிட்டது.

மேலும் விபத்து காரணமாக கப்பலுக்குள் அதிக வெப்பநிலையில் தண்ணீர் சூடேறி இருக்கிறது. இதனால் கப்பலில் சிக்கிய 18 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், அதிக வெப்பநிலை காரணமாக உடல்கள் கருகி உலைக்குலைந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து கப்பலுக்குள் மூழ்கிய வீரர்களின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

நேற்று அதிகாலை கப்பலின் பின்பகுதியை உடைத்து உள்ளே சென்ற நீர்மூழ்கி, அங்கிருந்த 5 சடலங்களை மீட்டுள்ளனர். இந்த சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உலைக்குலைந்துள்ளதால், இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மரபணு சோதனை நடத்த கடற்படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கப்பலில் உள்ள ஆயுதங்கள் எந்நேரமும் வெடித்து சிதறலாம் என்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

The first five — severely disfigured — bodies were recovered by divers on Friday morning from the INS Sindhurakshak

Related posts