பீகார் மாநிலத்தில் கொடூரம் ரயில் மோதி 20 பேர் பலி

aug-19. பீகார் மாநிலம் பாமரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 20 சிவ பக்தர்கள் மீது அதிவேக ரெயில் மோதி பரிதாபமாக பலியாகினர்.

பாட்னா-சஹஸ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பாமரா ரெயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்பகுதியில் யாத்திரை செய்ய வந்திருந்த சிவ பக்தர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் வேகமாக மோதியது.

இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கியும், தூக்கி வீசப்பட்டும் 20 சிவ பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோவம் அடைந்த அப்பகுதி மக்கள் ரயிலை அடித்து நொறுக்கி இஞ்சினுக்கு தீ வைத்து எரித்தனர் மற்றும் ரயிலை ஓட்டிய ஓட்டுனரை அடித்து கொன்றனர்.

பொதுவாகவே அப்பகுதியில் குகைக்குள் செல்லும் எந்த ரயிலாக இருந்தாலும் மெதுவாக செல்வது வழக்கம் இதனால் அப்பகுதி மக்கள் தண்டவாளைத்தை கடந்து செல்வது வழக்கமா இருந்து வந்துள்ளது ஆனால் சம்பம் அன்று ராஜாராணி ரயில் வேகமாக வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என செய்திகள் தெருவிகின்றன

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

 

Bihar: 20 dead as Rajya Rani Express runs over them, mob assaults driver

Related posts