ஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் இந்நிலையில் .

கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நடந்துவரும் இப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் வரும் 12ம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திரா பகுதி காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளனர்.

அப்போது சோனியா காந்தி கூறுகையில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே அந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரசார் தெலுங்கானா அமைய முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள எந்த பகுதி மக்களுக்கும் அநீதி ஏற்படுத்த வேண்டும் என் பதற்காக நாங்கள் இங்கு இருக்கவில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாருக்கும் நீதி கிடைக்கச் செய்வோம்.

ஆந்திரா பகுதி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் பற்றி கவனத்தில் கொள்ள 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோனி தலைமையிலான குழுவிடம் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சோனியாவுடனான சந்திப்பு ஆந்திரா தலைவர்களுக்கு திருப்தி அளிக்காத வகையிலும், குறிப்பாக ஐதாராபாத் மீதான உரிமை பற்றி சோனியா உறுதி அளிக்காதது காங்கிரசாருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

andra pradesh telungaana news

Related posts