ஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்து

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார்.

இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார்.

ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

Obama Snowden 610

 

U-S-Officials-Urge-Obama-to-Do-Anything-to-Get-Snowden

 

 

 

 

gholami20130713001326223 (1)

 

Obama meet Putin is canceled because of snowden

Related posts