தலைவா பட பிரச்சினை முதல்வருக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார்

தலைவா படத்தினை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பல சிக்கல்களை சந்தித்து வந்த தலைவா படமானது 20ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட்டு 9ம் தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளல் திரையிட முடியவில்லை.

கடந்த பத்து நாட்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனையானது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்.

பல வேலைகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

thalaiva

Vijay met Jayalalitha

actor vijai thanks to chief minister

Related posts