மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால்…: திலகவதி IPS

காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான் நிம்மதியான இல்லற வாழ்க்கை வாழ முடியும் என முன்னாள் காவல் துறை அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசானது காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கின்றது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஐ.ஜி.சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மூன்று காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் சட்ட வல்லுநர் உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக அமைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்து பி.பி.சியில் கருத்தை பதிவு செய்த முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியான திலகவதி காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும்.

மேலும் காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் காவலர்களை தங்களது மகளாக அல்லது சகோதரியாகவோ ஏன் குறைந்த பட்சம் சக ஊழியராக கூட மதிப்பதில்லை. அதனால் தான் பெண் காவலர்களிடம் அவர்கள் வேறு மாதிரியான பிரதிபலனை எதிர்பார்க்கின்றார்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு பெண் காவலர்கள் தற்கொலை செய்யப்படும் சம்பவங்கள் தற்போது தமிழக காவல் துறையில் நடந்து கொண்டிருக்கின்றன.

இது போன்ற பிரச்னைகளை விசாரிக்கும் இடத்தில் முன்பு நான் இருந்தபோது பெண் காலவலர்கள் பல பேர் மேலதிகாரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையிட்டார்கள். ஆனால் எழுத்துப்பூர்வமாக புகார் தரமுடியுமா? என்று கேட்டபோது அவர்கள் அனைவருமே பின் வாங்கி விட்டனர்.

இதுவே பல அதிகாரிகளுக்கு சாதகமாகி விடுகின்றது. இது போன்ற சூழ்நிலைகளில் விசாரணை அதிகாரியாக இருப்பவர்கள் புகாருக்காக காத்துக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றி அவர்களது பணிச்சுமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் பெண் காவலர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் ஓரளவாவது குறையும் என்று கூறியுள்ளார்.

திலகவதியின் இந்த கருத்துப் பதிவு காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

thilagavathy ips speech about higher officers

thilagavathy ips speech about higher officers

Related posts