இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

DMK Treasurer MK Stalin Speech in Dindukal about Sethu Canal

திண்டுக்கல், ஜூலை. 24-

மு.க.ஸ்டாலின்

தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டார். அவரிடம் தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடியே 1 லட்சத்தை மாவட்ட செயலாளர் எல்.மூக்கையா வழங்கினார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது, தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட நிதியளிப்பு கூட்டங்களில் இங்குதான் அதிக கூட்டத்தை பார்க்கிறேன். நிதி வழங்கிய தொகையின் மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. பிற மாவட்டங்களை காட்டிலும் தேனியில் நிதி குறைவாக கொடுத்து இருந்தாலும் இங்கு வந்திருக்கும் மக்களின் எழுச்சியில் தேனி மாவட்டம்தான் முதல் இடம். தி.மு.க. இப்போது ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லாத காரணத்தால் நாங்கள் சோர்ந்து விடவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தே தீரவேண்டும் என்று தொடங்கப்பட்ட கட்சி இல்லை. 1957ம் ஆண்டு, முதல் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். 1962ம் ஆண்டு தேர்தலில் ஏறக்குறைய 50 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

1967ம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு வெற்றி தோல்வி என பல்வேறு நிலைகளை கடந்து தி.மு.க. வந்துள்ளது. தோல்வியால் தி.மு.க. துவண்டு போகும் கட்சி இல்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நம்மைபோல் வெற்றி பெற்றவர்களும் இல்லை. நம்மை போல் தோல்வி அடைந்தவர்களும் இல்லை. இரண்டிலும் நாம்தான் முதல் இடம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் போய் உட்கார முடியாத ஒரு நிலை. அதற்கு கவலைப்படவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இடம் பெறவில்லை என்றாலும் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை தி.மு.க. தான் எதிர்க்கட்சி. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற நாம் அனைத்து தியாகத்திற்கும் தயாராக இருக்கவேண்டும். சேது சமுத்திர திட்டம தென்மாவட்டங்களுக்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், இந்தியாவிற்கும் வளம் சேர்க்கும் பெருமை சேர்க்கும் திட்டம் ஆகும். சமச்சீர் கல்வி அமல் படுத்தப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டு உள்ளது. சென்ற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் ஒருவர் இந்த கல்வியாண்டில் 9 பேர், சென்ற ஆண்டு 2-வது இடம் பிடித்தவர்கள் 6பேர். இந்த ஆண்டு 52பேர் சென்ற ஆண்டு 3-வது இடம் பிடித்தவர்கள் 11பேர். இந்த ஆண்டு 137பேர். கணிதத்தில் சென்ற ஆண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் 1141பேர். இந்த ஆண்டு 950பேர். இந்த முன்னேற்றத்திற்கு கலைஞர் நிறைவேற்றிய சமச்சீர் கல்விதான் கராணம். தேனி மாவட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 18ம் கால்வாய் அமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.11கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய பஸ் நிலையத்திற்கு நான்தான் அடிக்கல் நாட்டினேன். 90 சதவீத பணிகள் முடிந்ததும் இதுவரை அதனை திறந்து வைக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக படுகொலை செய்யப்படும் நிலைமை உருவாகி இருக்கிறது. சேலத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ் வீட்டில் 1 மாதத்திற்கு முன்பு கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த படுகொலையை தடுத்து இருக்கலாம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திலும் கடந்த 2 ஆண்டுகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

English Summary: News Courtsy – The Hindu

DMK Treasurer MK Stalin Speech in Dindukal about Sethu Canal

Implementation of the Sethusamudram project will not only bring benefits to Tuticorin but also improve the overall prosperity of Tamil Nadu, said M.K. Stalin, treasurer, Dravida Munnetra Kazhagam (DMK). Addressing a public meeting at Sri Mushnam near here on Saturday, he said that certain sections were opposing the project with personal motive, not realising the advantages of the project. In fact, the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), in its 2004 election manifesto, favoured the project. But, now it has reversed its stand as the Jayalalithaa government has moved the Supreme Court to stall the project, Mr. Stalin said. The main reason for the government opposing the project was that if it was implemented, the credit would go to the DMK.

Related posts