விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் காலமானார்

உலகத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானியும் கணினிக்கான மவுஸ்சை கண்டு பிடித்தவருமான  டக்ளர்ஸ் எங்கிள்பாட் தனது 88 வது வயதில் சிறுநீரக கோளாறால் கடந்த செவ்வாய் இரவு காலமானார் .

விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் அமெரிக்காவைச் சேர்ந்தவர் . 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார்.

டக்ளர்ஸ் எங்கிள்பாட்தனது இரண்டாவது மனைவி காறின் ஓ லார்ரியுடன் வாழ்ந்து வந்தார், இவருடைய முதலாவது மனைவி பலாட் 1997 ல் மரணமடைந்தார்.இவருக்கு  கார்டா, டயானா, கிறிஸ்டீனா, நோர்மன் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர் .

 

Father of the computer mouse DOUGLAS ENGELBART died

 

Related posts