நான் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி: நடிகை கனகா பேட்டி

Actress Kanaka Is Alive தான் புற்று நோயால் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி என நடிகை கனகா பேட்டி அளித்துள்ளார். முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான கனகா, இவர் நடித்த கரகாட்டக் காரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இதையடுத்து ரஜினி, பிரபு, கார்த்திக், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த அவர், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக மாறியிருந்தார். திருமணம் செய்து கொள்ளாது இருந்த அவர் 200ம் ஆண்டில் தனது தனது தாய் இறந்த பின்பு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவின் ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. சமீபத்தில் மலையாள திரையுலகத்தின் பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில்…

Read More

தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கம்

separate Telangana state ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்டின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜீத்…

Read More

பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!:வட்டி விகிதம் அதிகரிக்கும்?.

The Reserve Bank of India (RBI) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பை நிலைக்குக் கொண்டு வர மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய சில நடவடிக்கைகளை அறிவித்திருப்பதன் மூலம் லிக்விடிட்டியை மீண்டும் இறுக்கமாக்கியுள்ளது. ஆர்பிஐ, லிக்விடிட்டி அட்ஜஸ்ட்மெண்ட் வசதியின் (LAF) கீழ் வங்கிகளுக்கு வழங்கி வந்த பணத்தை, வங்கியில் இருக்கக்கூடிய டெபாசிட்களில் சுமார் 0.5 சதவீதம் என்ற விகிதத்தில் குறைத்துள்ளது. இது ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்குமான சுமார் 1% அல்லது 75,000 கோடிகளோடு ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “LAF உபயோகத்துக்கான ஒட்டுமொத்த வரையறை ஒவ்வொரு வங்கிக்கும், இரண்டாவதாக வரக்கூடிய இருவார காலக்கெடுவின் கடைசி வெள்ளிக்கிழமையில் இருக்கக்கூடிய அதன் சொந்த என்டிடிஎல் (NDTL) அவுட்ஸ்டாண்டிங்கில் சுமார் 0.5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 24, 2013 -இலிருந்து அமலாக்கம்…

Read More

குடி போதையில் வாகனம் ஓட்டிய மயிலாப்பூர் காவல் ஆய்வாளர்

mylapore police inspector was booked for drunken driving சென்னை: மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம். இவர் சனிகிழமை (27 ஜூலை 2013) இரவு 12 மணியளவில் ராஜா அண்ணாமலை புரம் டி.வி.எஸ். தினகரன் சாலை யில் போலீஸ் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது போலீஸ் வாகனம் நிலை தடுமாறி ஓடி பிளாட்பாரத்தில் மோதியது. இதில் வண்டியின் டயர் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர்கள் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் குடிபோதையில் உள்ளாரா என்பதை கருவி மூலம் சோதித்தனர். இதில் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய 2 பிரிவின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்குகள்…

Read More

ஆடிட்டர் ரமேஷ் கொலை: 4 பேர் கைது

4 accused arrested in auditor ramesh murder case நெல்லை,ஜூலை28:ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொது செயலர் ஆடிட்டர் கடந்த 19ம் தேதி  மரவேனரி கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் கொலை குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில்  தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய சிபிசிஐடி டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், கொலை வழக்கு குற்றவாளியாக மதுரையை சேர்ந்த…

Read More

சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்

பொருளாதார ரீதியாக சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளருவது இந்தியப் பொருளாதாரம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மிளகனூரில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக் கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வங்கித் தலைவர் எஸ்.எல். பன்சால் தலைமை வகித்தார். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வங்கிக் கிளை, ஏ.டி.எம். மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். தனது சொந்த தொகுதியான சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது: அனைத்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை உள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது சர்வதேச அளவில் மந்த நிலையில் உள்ளது. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாது. அதே…

Read More

மீனாட்சி நடராஜன் 100% வீதம் கவர்ச்சியானவர்: திக் விஜய் சிங்

Congress defends Digvijaya Singh’s remarks on Meenakshi Natarajan காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி நடராஜன் 100 வீதம் கவர்ச்சியானவர் எனும் அர்த்தத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பேசிய திக் விஜய் சிங், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் அதிக அளவில் கடுமையாக உழைக்கின்றனர். இதோ இங்கு இருக்கும் மண்ட்சோர் எம்.பி  மீனாட்சி நடராஜன் இதற்கு நல்லதொரு சாட்சி. அவர் மிகவும் நேர்மையானவர். கடும் உழைப்பாளி, இன்னும் சொல்லப்போனால் அனைவரும் விரும்பத் தக்கவகையில் 100 சதவீதம் மிக கவர்ச்சியானவர் எனக் கூறியதாக தொலைக்காட்சி ஊடகமொன்று தகவல் வெளியிட்டது. இதையடுத்து பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புக்கள் திக்விஜய் சிங்கிற்கு தமது எதிர்ப்பை…

Read More

மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து: திருமாவளவன்

thirumavalavan signed in the memorandum against modi சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக் கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட மனுவில் நான் கையெழுத்துப் போட்டுள்ளேன். மோடிக்கு விசா தரவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. அதை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் எம்.பி.க்களிடையே கையெழுத்து வாங்கும் முயற்சி நடந்தது. கடந்த 18-12-2012 அன்று நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது கையெழுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட சில எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டனர். அதில் நானும்…

Read More

கடலூரில் விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு துவக்கம்..

கடலூர்: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது அகில இந்திய மாநாடு, கடலூரில் நேற்று துவங்கியது. சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், மாநாட்டுக் கொடியை சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா ஏற்றி, பேசினார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் சுடரை விழாக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். 33வது மாநாட்டை குறிக்கும் வகையில் மண்டப வளாகத்தில் 33 மரக்கன்றுகள் நடப்பட்டன. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாடு துவங்கியது. அகில இந்திய இணைச் செயலர் சுக்லா, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை தலைமை உரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் வாழ்த்திப் பேசினார். துவக்க விழாவில் வரவேற்புக் குழு கவுரவத் தலைவர்…

Read More

வால்மார்ட் போனால், மற்றோரு மார்ட் வரும்: காங்கிரஸ்

Walmart can’t meet norms, Congress says other ‘marts’ will come அமெரிக்கா விலும் ஐரோப்பாவிலும் சில்லரை வணிகம் பல்தேசிய வியாபார நிறுவவங்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டுவரப்பட்ட காலம் 1970 களின் ஆரம்பகாலம். இதன் பின்னர் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டிலிருந்து மீள முடியாத நெருக்கடிக்குள் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் அமிழ்ந்துள்ளன. மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஐரோப்பா அமெரிக்கா  போன்ற நாடுகளைப் போலன்றி வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழித்து மக்களை மேலும் வறுமைக்கு உட்படுத்தும் நோக்கில் வால்மார்ட் போன்ற அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனங்களை கையைப் பிடித்து அழைத்து வந்துள்ளன. சில்லரை வணிகத்தில் இலாபமடையும் அன்னிய நிறுவனங்களின் உள்ளூர்த் தரகர்களின் நலன்களுக்காகச் செயற்படும் இந்திய அரசு மக்களை மந்தைகளாகவே கருதுகின்றது, தொலைத்தொடர்பு, காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் அன்னிய…

Read More