தமிழ்நாடு இயக்குனர் சங்க தேர்தல் : இயக்குனர் விக்ரமன் வெற்றி

Tamilnadu Directors Association election, Director vikraman elected as the President of Directors Association

716 வாக்குகள் பெற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 1,518 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின்    தலைவர் பதவிக்கு இயக்குனர் “விசுவும்”, இயக்குனர் “விக்ரமனும்” போட்டியிட்டனர்.

பொதுச் செயலர் பதவிக்கு ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணியும், துணைத் தலைவர் பதவிக்கு பி.வாசு,கே.எஸ்.ரவிக்குமார், மங்கை அரிராஜன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்குசேகர், ஜெகதீஷ் ஆகியோரும், இணைச் செயலர் பதவிக்கு லிங்குசாமி,பேரரசு,சண்முக சுந்தரம், செய்யாறு ரவி, ஏகம்பவாணன், ஜெயப்பிரகாஷ், கண்ணன், பிரபாகர் ஆகியோரும்போட்டியிட்டனர்.

இரு அணிகள் சார்பிலும் செயற் குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர்.இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.ஐகோர்ட் வழக்கறிஞர் செந்தில் நாதன்தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.நேற்று இரவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில் மொத்தம் 1,285 வாக்குகள் பதிவாகின. இவற்றில் 13 செல்லாத ஓட்டுகள் தவிர்த்து, இயக்குனர் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் விசுவுக்கு 516 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது.

“விக்ரமன்” கூருகையில் எனது அணி வேட்ப்பளர்கள் அனைவரும் வெற்றி பெற்ற பின்னரே நான் இந்த மகிழ்ச்சியை கொண்டாட முடிவு செய்துள்ளேன், மற்றும் உதவி இயக்குனர்களின் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் எங்கள் அணி செயல்படும், குறும்படங்கள் இயக்க நாங்கள் ஐந்து 5டி கேமராக்களை வாங்கி உள்ளோம் இதனை உதவி இயக்குனர்கள் யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எங்கள் எதிர் அணியையும் ஒன்று இணைத்து அனைவரும் ஒன்றாய் செயல்படுவோம்  என கூறினார்

இயக்குனர் விக்ரமன்

Tamilnadu Directors Association election, Director vikraman elected as the President of Directors Association

Related posts