மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்

latest news bharatiya janata party L.K.Adwani quit all post in bjp

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கட்சியில் தனது அனைத்து பதிவிகளையும் ராஜினாமா செய்தார் இதனால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூட்டணி கட்ச்சிகளும்  பாஜக வில்  இருந்து விலகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது இதனால் பாஜக உடையும் நிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கட்சியில் தனது அனைத்து பதிவிகளையும் ராஜினாமா செய்தார் இதனால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அத்வானி இம்முடிவை எடுத்து உள்ளார் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தமது கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது பாரதிய ஜனதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கட்சி அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கிறது மற்றும் மூத்த தலைவர்களை வைத்து அத்வானியை சமாதானப் படுத்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் பி.ஜே.பி தெரிவித்துள்ளது

இந்நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ, அத்வானியே ராஜினாமா செய்துவிட்ட பிறகு அப்படி ஒரு கூட்டணியே இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் கூறுகையில், அத்வானியின் ராஜினாமா எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியவர்கள் வாஜ்பாயும், அத்வானியும்தான். அவர்களுடன் இணைந்து ராமகிருஷ்ண ஹெக்டே குறைந்த பட்ச பொதுசெயல் திட்டத்தை உருவாக்கினார்.

எங்களைப் பொறுத்தவரை அத்வானி ராஜினாமா செய்துவிட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறுவது பற்றி நாங்கள் மறுபரிசீலனை செய்கிறோம். இந்த வார இறுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எங்களது முடிவு தீர்மானிக்கப்படும். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரும் சொந்த நலனுக்காக செயல்படுவதாக அத்வானி தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபற்றி பாஜகவினர் சிந்திக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் அத்வானி வெளியேறிவிட்ட பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்சியில் ஏற்ப்பட்டுள்ள சில பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. எல்.கே.அத்வானி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இனி தொடர்வேன் என கூறி உள்ளது குறிப்பிட தக்கது.

latest news bharatiya janata party L.K.Adwani quit all post in bjp

Related posts