நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கம்: நில மோசடி வழக்கு

AIADMK Tirunelveli rural north district secretary, a case of land-grabbing

ஜூன் 07,2013, :திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க.,வின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.குமார்பாண்டியன். குற்றால நகராட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார். நெல்லை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுற்றுலா துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிப்பட்டு குமார்பாண்டியன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

குமார்பாண்டியன்

இந்நிலையில் இவரை அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா, பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இவர் குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான 73 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அவசர பணத்தேவைக்காக அவர் குற்றாலத்தை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார்பாண்டியனிடம் நிலத்தின் பேரில் கடன் வாங்கினார்.

சமீபத்தில் சுப்பையா கடன் தொகை முழுவதையும் திருப்பிக் கொடுத்து விட்டு நிலத்தை மீண்டும் தான் அனுபவிக்க போவதாக கூறியுள்ளார்.

கடந்த 2.9.2012 அன்று கடன் தொகை முழுவதையும் திருப்பிக் கொடுப்பதற்காக குமார் பாண்டியன் வீட்டிற்கு சுப்பையா சென்றபோது, அவர் பணத்தை வாங்க மறுத்ததுடன், நிலத்தை விட்டு விட்டு ஓடிவிடு, இல்லையென்றால் உன்னை தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு ஒருவாரம் கழித்து, சுப்பையா மற்றும் அவரது மருமகன் ராஜேந்திரன் மேலப்பாவூர் செல்லப்பா ஆகியோர் வயலில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த குமார்பாண்டியன் சுப்பையாவை தாக்க முயன்றார். மேலும் நான் பயிரிட்டுள்ள நிலத்தில் உனக்கு எந்த தொடர்பும் கிடையாது. மீறி வந்தால் உன்னையும், உனது குடும்பத்தினரையும் கார் ஏற்றி கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு சுப்பையா, புகார் மனுஅனுப்பியிருந்தாராம். இதுவரையிலும் அந்த மனுமீது நடவடிக்கை இல்லாமல் இருந்தது.

குற்றாலத்தில் மதுரை, நெல்லை தி.மு.க.,பிரமுகர்கள், கடந்த ஆட்சியின்போது பங்களாக்கள் வாங்குவதற்கு உதவியதாகவும், தி.மு.க.,பிரமுகர்களுடன் குமார்பாண்டியன் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் அவருக்கு எதிரான அ.தி.மு.க., கோஷ்டியினரே மேலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த புகார் மீதான விசாரணையில்தான் குமார்பாண்டியன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு சேர்ந்து தற்போது நிலத்தை அபகரித்து வழக்கிலும் சிக்கியுள்ளார்.

சுப்பையாவின் புகாரின் பேரில், நெல்லை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துகுமார் விசாரணை நடத்தினார். குமார்பாண்டியன் மீது 341, 294 பி, 355, 447, 384, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

AIADMK Tirunelveli rural north district secretary, a case of land-grabbing

Related posts