சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்

பிளாஸ்டிக் கம்பனியில் வேலை என்று கூறி சுமார் 200 இந்தியர்களை மும்பையை சேர்ந்த பஹாத் என்டேர்பிரைசஸ் அரேபியாவிற்கு அழைத்து சென்று உள்ளது , டெல்லி ,ஆந்திரா,பீகார் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம், இங்குள்ள இந்தியர்களை ரூ .90,000 முதல் 1,50,000 வரை சம்பளம் என்றும் கூரி அழைத்து சென்றுள்ளனர்

ஆனால் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை தரப்படாமல் கழிவறை கழுவும் வேலை தரப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாதங்களாக எந்த சம்பளமும் தரப்படாமல் கொடுமை படுத்தப் பட்டுள்ளனர், இதையடுத்து அவர்கள் இந்திய துதரகத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை கொடுத்ததால் அவர்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட் ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர் மேலும் வேலைக்கு வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வெண்டீருக்கும் என்று மிரட்டியும் உள்ளனர்  பயத்தில் உள்ள இந்தியர்கள் மேலும் அவர்களை யாரும் தாக்காமல் இருக்க இந்திய தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளதா தகவல் வெளியாகி உள்ளது


Related posts