ரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!

Real estate Regulations in India

நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும்.

முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும்.

*  ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு கட்டுமானத் திட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர், அதற்கு தேவையான அனைத்து துறை அனுமதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

* இந்த சட்டம் அமலுக்கு வந்த ஒரு ஆண்டுக்குள், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தினால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும். ஒரு மாநிலத்துக்கு அதிகபட்சம் 2 ஆணையங்கள் வரை இருக்கலாம். மத்திய அரசு அளவில், ரியல் எஸ்டேட் மேல்முறையீடு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

* ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பாக தவறான விளம்பரங்கள் கொடுக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், தவறான விளம்பரம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டால், திட்டத்தின் மதிப்பில் இருந்து 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.

* ஒவ்வொரு ரியல் எஸ்டேட் திட்டத்திலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறும்போது, அதை 50 சதவீதத்தை தனி வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டும். அதை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. இதன் மூலம் மோசடியாக பணம் வசூலித்த மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

* “கார்பெட் ஏரியா” அளவு என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். சூப்பர் ஏரியா என்று குறிப்பிட்டு, அதில் தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்வது நிறுத்த தடுக்கப்படும்.

இவ்வாறு சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பலர் இதை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Real estate Regulations in India

For Real Estate Properties : Bestsquarefeet.com

Flats sale in Chennai Annanagar
Click here to contact us…

Related posts