நான்கு வகையான அம்புலேன்ஸ்: மத்திய அரசு திட்டம்

அரசியல் மாற்றங்களும் அறிவியல் முன்னேற்றங்களும் நிகழும் இந்த நிலையிலும் இன்றும் இந்தியாவில் அவசரத்திற்கு உதவ செல்லம்  அம்புலென்ஸ்கு வழி இல்லை குறுகிய சாலைகள்   ஆம்புலென்ஸ் செல்ல முடியாத குறுகிய வழிகள் அம்புலேன்சுடன் போட்டி போட்டு  செல்லும் வாகனங்கள் என பல பிரச்சனைகள் மத்தியில் முதலுதவி பெற முடியாமல் பலரும் தவிக்கின்றனர் ஒரு சிலர் இறக்கின்றனர், அத்துடன் பெரும்பாலான நகரங்களில் சாலை வசதியே மிக குறுகலாக உள்ளது. இதனைப் குறைக்கும் வகையில், மத்திய அரசு விரைவில் நான்கு விதமான ஆம்புலன்ஸ் வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் வரையில் தேவையான முதலுதவி சாதனங்களுடனும், திறமையான ஊழியர்களுடனும் இந்த வாகனங்கள் செயல்படுத்தப்படும். இவற்றில் முதல் பணியாளர் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் போன்ற நாடுகளில் இதுபோன்ற வாகன சேவைகள் மக்களுக்கு கிடைக்கின்றன.

இரு சக்கர வாகனங்களில் செல்லும் மருத்துவ ஊழியர்கள் விபத்தில் சிக்கியவருக்கு தேவையான முதலுதவிகளை அளிப்பார்கள். முதல் வகையான இந்த சேவைக்குப் பின்னர், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வாகனங்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய வாகனங்கள், மேம்பட்ட மருத்துவ வசத்திகளுடன் கூடிய வாகனங்கள் என நான்கு வகையாக இவை பிரிக்கப்பட்டிருக்கும்.

தேசீய ஆம்புலன்ஸ் விதிமுறைகளின்படி இவை வெண்மை நிறத்தில், உருக்குலைந்து போகாத தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். தற்போது செயல்படும், ஆம்புலன்சுகளில் பெரும்பாலும் தேவையான முதலுதவி கருவிகள் இல்லை.

சாதாரண போக்குவரத்து வண்டிகளாக இருகின்றன. எனவே, சாதாரண நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முதல் வகை வாகனங்கள் பயன்படும். இது தவிர அடிப்படை வசதிகள் கொண்ட வாகனங்களும் ஆம்புலன்சுகள் தேவைபடுவோருக்கு பயன்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Related posts