எய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்

AIDS HIV ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது. ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும். ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய…

Read More

"தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்

EC issues show cause notice to Gopinath Munde இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார். வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த…

Read More

ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு விமான நிலையம்:பிரதமர் முடிவு!

Green Field airport Sriperumbudur புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், கிரீன்பீல்டு விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் – அரசுத் துறை பங்களிப்புடன், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆறு மாதங்களில், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அரசு – தனியார் பங்களிப்புடன், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.…

Read More

தமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

Major reshuffle of IAS officers in tamilnadu சென்னை: தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை தவிர திருவண்ணாமலை, தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு கிளம்பிய சற்று நேரத்தில் இந்த உத்தரவுகள் நேற்று வெளியாயின. இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார். மாற்றப்பட்ட அதிகாரிகள் முழு விவரம் : பி.டபிள்யூ.சி.டேவிதார்:  புதிய பதவி: பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர். முந்தைய பதவி: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ஹர்மந்தர் சிங்: புதிய பதவி: கைத்திறன், ஜவுளி மற்றும் காதித் துறை முதன்மைச் செயலாளர் முந்தைய பதவி: தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர். எஸ்.கிருஷ்ணன் புதிய பதவி: திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் நிதித் துறை செயலாளர்- செலவினம். டி.உதயசந்திரன்…

Read More

பருதிஇளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்

dmk famous former minister Joins AIADMK திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் முன்னால் துணை பொது செயலாளரும் மான பருதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார். திமுகவின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்த பருதி அவர்கள் சற்று நாட்களாக திமுகவின் அனைத்து கூட்டம் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார்.  இன்று திடிரென்று அவர் முதல்வர் ஜெ வை சந்தித்து அதிமுக வில் அவரை இணைத்துக் கொண்டார். பருதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அவர் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்…

Read More

இந்திய சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்

Road accident in india. tamilnadu in Top Position. இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறும் பகுதியாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது. கடந்த வருடம் தமிழ் நாட்டில் 67 ஆயிரத்து 757 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 16 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமான பிரதான சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அளவுக்கு அதிகமான வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வாகன ஓட்டிகளுக்கு முறையான பயிற்சியின்மை, உள்ளிட்டவை விபத்துக்களுக்கான பிரதான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இதேவேளை பாதுகாப்பான முறையில் சாலை கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளே இல்லை என்ற நிலை மாறி இன்று 100அடி 200அடி சாலைகள் வந்த பிறகு அதை பொதுமக்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் உபயோகம் செய்யாமல் அதி வேக பயணம் செய்வதாலும் சாலை விதிகளை சரிவர பின்பற்றததுமே காரணம் என தெரிவிக்கின்றனர் Road accident in india. tamilnadu in Top Position.

Read More

மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்   தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில்  அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…

Read More

தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!

gold price dips in tamilnadu வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய…

Read More

தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.

பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai

Read More

பள்ளி வேன் கவிழ்ந்து ஒரு மாணவர் பலி, 7 மாணவர்கள் படுகாயம்

அதிகாலை இன்று (26.6.13) பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவர்கள் படுகாயம் ஒரு மாணவர் பலியானார் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்லாவரம் அருகே தனியார் பள்ளி வேல்ஸ் வித்யாஷ்ரம் வேன் கவிழ்து 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் ஆனால் 9ம் வகுப்பு மாணவரான தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். pallavarm school bus accident. student deth

Read More