அமெரிக்காவில் நடந்த புவியியல் போட்டியில் இந்திய வம்சாவழி மாணவர் முதலிடம்

Indian-American wins National Geographic Bee

அமெரிக்காவில் உள்ள ‘நேசனல் ஜியோகிராபிக்’ என்ற அமைப்பு ‘நேசனல் ஜியோகிராபிக் பீ’ என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது.

student_won_01

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.

மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார். இவருக்கு பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டொலர்(ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஈகுவடார் நாட்டின் காலாபகோஸ் தீவுகளை சுற்றிப்பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. நேசனல் ஜியோகிராபிக் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் என்ற அங்கீகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவரின் பெற்றோர் கடந்த 2002ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு குடியிருந்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் நடைபெறும் இது போன்ற போட்டிகளில் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Indian-American wins National Geographic Bee

Indian-American wins National Geographic Bee

Related posts