ஜெ.பேரவை மாநில செயலாளர் கார் பறிமுதல்

AIADMK Politician car seized in dharmapuri

20 மே 2013 தர்மபுரி:

ஜெ.பேரவை மாநில செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், அரசு விதிகளை மீறி, சுழல் விளக்கு பொருத்திய காரை பயன்படுத்தியதால் எஸ்.பி உத்தரவின் பேரில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எஸ்.பி.,ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் அதிவேகத்தில் தருமபுரி நான்கு சாலைகள் சந்திப்பில் சென்ற காரை பரிசோதனை செய்து பார்க்கும் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜெ.பேரவை மாநில செயலாளர்  டி.ஆர். அன்பழகன் சட்டவிரோதமாக சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அந்தஸ்தில் இருக்கும் டி.ஆர். அன்பழகன் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

Red Light car seized in dharmapuri

அந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் எம்.துரை (39) மீது வழக்குப் பதிவு செய்தனர். தருமபுரி நகரக் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரை ஞாயிற்றுக்கிழமை காலையில் விடுவித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

AIADMK Politician car seized in dharmapuri

 

Related posts