கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.

srilankan navy in bay of bengal to warn Indian tamil fishermen

இலங்கை போர்க் கப்பல்கள் : File

தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையை மீறி மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கப்பற்படை 4 பெரிய போர்க் கப்பல்களையும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு, 45 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து, தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றுள்ளனர்.

வரும் சனிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் நாளாக கடைபிடித்து வருவதால், எப்போதும் போல ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் மீன் பிடிக்க தயாரக இருக்கும் நிலையில், இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே இந்திய தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வகையில், கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 பெரிய போர்க் கப்பல்கள் மற்றும் 5 சிறிய ரோந்துக் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. இது தவிர, தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் கச்சத்தீவின் எல்லையில் மிதவை பலூன்களையும் கடலில் மிதக்க வைத்துள்ளனர்.

மீன்பிடி தடைக் காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்  நேரத்தில் இலங்கை கடற்படை போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பது மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல இருப்பதால், மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் மீன்வளத் துறை அதிகாரிகளும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

srilankan navy in bay of bengal to warn Indian tamil fishermen

Buying selling Property in chennai :  Best Square Feet

Related posts