நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

Parliament of India resumes today : 22April2013

திங்கள் – 22 ஏப்ரல்-2013:  நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது.  டெல்லி பாலியல் பலாத்காரம், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூட உள்ள நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல், டெல்லி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட  முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடியது. ரெயில் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி யும்,  2013-14-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை 28-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டு,  மார்ச் 21-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நாடாளுமன்றத்திற்கு  விடுமுறை விடப்பட்டது.

நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நாளை மீண்டும் தொடங்குகின்றது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் விவாதங்கள் மற்றும் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டதொடர் மே மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி ஊழல், இராண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீடு, முக்கியமாக டெல்லியில் தொடரும் பாலியல் பலாத்காரம் சம்பவங்கள்,  மற்றும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்காள அமைச்சரும் டெல்லி திட்ட கமிஷன் அலுவலகம் முன் தாக்கப்பட்டனர். இது தொடர்பான பிரச்சினையை கிளப்ப திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தக் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது.  இதில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருடன் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் சுமூகமாக நடத்துவது குறித்து  ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Parliament of India resumes Today : 22April2013

Property sale in Chennai

Flats sale in Chennai Annanagar
Click here to buy Properties in Chennai Annanagar

 

Click here for Tamil News
Click here for Tamil News

Click here for best Tamil News online

Related posts