ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் மற்று ம் எம்.கே. திவாரி இருவரும் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, காலிஸ், யூசுப் பதான் மற்றும் மார்கன் ஆகியோர் ஆடினர்.

முன்னதாக பெளலிங்கின் போது, சுழ ற் பந்து வீரர் சுனில் நரீன் நன்கு பந்து வீசி டெல்லி அணியின் 4 முக்கிய விக் கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக பிரட்லீ, பாட்டியா மற்றும் பாலாஜி ஆகியோர் பந்து வீசினர்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் டி – 20 போட்டி நேற்று துவங்கியது. கொல்க த்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதா  னத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் கொ ல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய டெல்லி அணி கொல்கத்தாவி ன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 128 ரன்னை எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் கேப்டன் ஜெய வர்த்தனே நன்கு பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார். அவர் 52 பந்தில் 66 ரன் எடுத்தார். துவக்க வீரர் வார்னர் 21 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் குறை ந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

கொல்கத்தா அணி சார்பில், சுனில் நரீ ன் 13 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட்லீ, ஆர். பாட்டியா தலா 2 விக்கெட்டும் பாலாஜி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

கொல்கத்தா அணி 129 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை டெல்லி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்னை எடு த்தது.

இதனால் இந்த முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொ டரில் முன்னிலை பெற்று உள்ளது. கொல்கத்தா அணிக்கு 2 புள்ளிகள் கிடை த்தது.

கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் அதிகபட்சமாக, 29 பந்தில் 41 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். தவிர, காலிஸ் மற்றும் எம்.கே.திவாரி தலா 23 ரன் னும், யூசுப் பதான் 18 ரன்னும், மார்கன் 14 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி அணி சார்பில், எஸ் . நதீம் 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, நெக்ரா மற்றும் போத்தா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின்  ஆட்டநநாயக னாக சுனில் நரீன் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts