தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 28 சிறந்த தமிழ் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், பதிப்பகங்களுக்கு ரூ. 10 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil nadu Logo

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அந்த நூல்களைப் பதிப்பித்த பதிப்பகங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு

இதுதவிர, 1330 திருக்குறளை முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 36 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கவும், மாநில அளவில் கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2ஆவது பரிசாக ரூ. 12 ஆயிரம், 3ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 30 ஆயிரம் பரிசு பெறும் நூல்கள், நூலாசிரியர்கள், மற்றும் பதிப்பகங்கள்:

1. “இளங்கண்ணன் கவிதைகள்’, மு. இளங்கண்ணன் (திருக்குறள் ஆய்வு மையம்).

2. “மலர்களின் மாநாடு’, கவிஞர் நாவேந்தன் (அன்னை முத்தமிழ் பதிப்பகம்).

3. “மூனுவேட்டி’, அரு. மருததுரை. (காவ்யா பதிப்பகம்).

4. “அயோத்தி ராமாயணம்’, சி. விவேகானந்தன் (காவ்யா பதிப்பகம்)

5. “பர்வின்பானு சிறுகதைகள்’, பர்வின்பானு (தணல் பதிப்பகம்).

6. “நாட்டிய நாடகங்கள்’, நா. கோபாலகிருஷ்ணன் (அனன்யா பதிப்பகம்).

7. “அரும்புகளும், அறிவியல் அறிஞர்களும்’, சு. முத்துச்செல்லக்குமார் (எஸ். ராமகிருஷ்ணன்,

ருக்மணி மருத்துவத் தகவல் மைய பிரசுரம்).

8. “புரட்சித் தலைவி ஒரு புறநானூறு’, பெ.அ. இளஞ்செழியன் (விஜயலட்சுமி பதிப்பகம்).

9 “இலக்கண மரபும், இலக்கியப் பதிவும்’, ப. வேல்முருகன் (அய்யனார் பதிப்பகம்).

10. “கரம்சோவ் சகோதரர்கள்’, புவியரசு, (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).

11. “பௌத்த சமயக் கலை வரலாறு’, கு. சேதுராமன், (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).

12. “தமிழக வரலாற்றில் நீர் உரிமை- சங்க காலம் முதல் கி.பி. 1600 வரை’, கி.கிரா. சங்கரன்,

(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).

13. “ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்’, பி. சேதுராமன் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).

14. “சினிமா கலைக் களஞ்சியம்’, ஆரூர்தாஸ்,(மணிவாசகர் பதிப்பகம்).

15. “பெண்களுக்கான சட்டங்கள்’, ஆ. ஜெகதீசன் (மணிவாசகர் பதிப்பகம்).

16. “கங்கை கரையினிலே’, ப. முத்துக்குமாரசுவாமி (பழனியப்பா பிரதர்ஸ்).

17. “எல்லா நாளும் கார்த்திகை’, டி. பவா செல்லதுரை (வம்சி பதிப்பகம்).

18. “கூடுகள் சிதைந்தபோது’, அகிலேஸ்வரன் சாம்பசிவம் (வம்சி பதிப்பகம்).

19. “எண்களின் எண்ணங்கள்’, இரா. சிவராமன் (பை கணித மன்றம்),

20. “அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’, கதிரவன் கிருஷ்ணமூர்த்தி (அடையாளம் நிறுவனம்).

21. “அரவானிகள் அன்றும், இன்றும்’, கி. அய்யப்பன் (விசாலட்சுமி பதிப்பகம்).

22. “மருத்துவ சவால்’, டாக்டர் ஜெயம் கண்ணன் (கர்ப்ப ரக்ஷôம்பிகை மகப்பேறு மையம்).

23. “திருதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம்’, இல. மகாதேவன், மகாதேவ ஐயர்ஸ்,

(மகாதேவ ஐயர்ஸ் பதிப்பகம்).

24. “திருச்செந்தூரின் கடலோரத்தில்…’, ராமநாதன் பழனியப்பன் ( ராமநாதன் பழனியப்பன் பதிப்பகம்).

25. “நீ + நான் = புகழ்’, சுடர் முருகையா (விடிவெள்ளி பப்ளிகேஷன்ஸ்).

26. “சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும், விழிப்புணர்வும்’, வேணு சீனிவாசன் (விஜயா பதிப்பகம்).

27. “இதழ்கள் பேசுகின்றன’, மா.ரா. அரசு (ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம்).

28. “நுனிப்புல்’, வெ. நல்லதம்பி (வையவிப் பதிப்பகம்).

Read More

Related posts