இந்தியாவின் முக்கிய ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் தீ..

Fire in DRDO lab பாலாசூர்: ஓடிஸா மாநிலத்தில் உள்ள ஆயுத கிடங்கு மற்றும் ஆராய்ச்சி  கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடி குண்டுகள் தானாக வெடித்து சிதறியது. ராணுவதிற்கு பயன்படும் ஏவுகணைகள், பீரங்கிகள் ஆகியவை இங்கு தான் சோதனை செய்யப்படும். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 13-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சென்று தீயை அணைத்தனர். உள்ளே இருந்த வெடிகுண்டுகள், ஏவுகணைகள், பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. தீயணைப்பு இயந்திரங்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன. “இந்த விபத்தால், அருகில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் சந்திப்பூர் ராணுவ மையம் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. English Summary: Fire in DRDO lab: A massive…

Read More

பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

Sri Lankan actress Jacqueline Fernandez சென்னை: பிரபுதேவா இயக்கி வரும் இந்திப் படமான ராமைய்யா வொஸ் தாவைய்யா படத்தில் இரண்டாம் கதா நாயகியாக சிங்கள நடிகையான ஜாகுலின் பெணான்டஸ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதால், பிரபுதேவாவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இப் படத்தில்  நடிகர் கிரிஷ்குமார் ஹீரோவாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கள நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றொரு ஹீரொயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை கொன்று குவித்த சிங்களத்திற்கு, தமிழர்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சிங்கள நடிகையை  பிரபு தேவா தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. Sri Lankan actress Jacqueline Fernandez Flats sale in Chennai Ayanambakkam

Read More

நவீன கரும்பு உற்பத்தி திட்டம்: 100% மானியம்!!: முதல்வர் அறிவிப்பு

Tamilnadu Sugarcane Agriculture சென்னை: விவசாயிகளுக்கு நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 25க்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கரும்பு, மூலப் பொருளாக இருக்கிறது. காகிதம், சர்க்கரை, வெல்லம், கால்நடை தீவனம், மின்சாரம்,  ஆகியவை கரும்பிலிருந்து உற்பத்தி செய்ய படுகின்றன. கரும்பு  உற்பத்தித் திறனை  அதிகபடுத்துவதனாலும், செலவுகளை குறைப்பதனாலும் கரும்பு விவசாயிகள் அதிக லாபம் அடைய முடியும் என்பதை மையமாக கொண்டு, ‘நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்” என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். ஆக, இந்த 2013ல் 7500 ஏக்கர் பரபளவில் நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல் படுத்த கட்டளையிட்டு  ரூ.12கோடியே 93 லட்ச ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான…

Read More

சமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்

புதுடில்லி: 2013அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் வாயு இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் வாயு  சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் வாயு  சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. Property sale in Chennai Annanagar…

Read More

விஜயகாந்த் – திருமாவளவன் திடீர் சந்திப்பு

VCK leader Thirumavalavan calls on Vijayakant சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு,…

Read More

உலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா!

India ranks 8th among 27 most powerful nations in world புதுடெல்லி : இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. டெல்லியைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி பவுன்டேசன் (எப்.எஸ்.என்.ஆர்) என்ற அமைப்பு உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை தயார் செய்தது. 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை, 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மொத்த உள்ளநாட்டு உற்பத்தி, 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ராணுவ செலவு இருக்கும் நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப பலம், வெளியுறவு கொள்கை பலம், பாதுகாப்பில் தன்னம்பிக்கை, சர்வதேச அமைப்புகளில் உறுப்பினர், சர்வதே விதிமுறைகளை உருவாக்குவதில் உள்ள பங்கு போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து இந்தப் பட்டியலை நிபுணர்கள் உருவாக்கினர். உலகில் சக்தி வாய்ந்த நாடுகளாக 27 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.…

Read More

இலங்கையில் தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க நிறுத்த வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

 Lankan army illegally encroaching lands of Tamils 26 ஏப்ரல் 2013: இலங்கையில் தமிழர் நிலங்கள் சிங்கள ராணுவத்தால் பறிக்கப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பாமல் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்து,இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவு கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குச் சொந்தமான 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பின்பும், அந்த நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் படவில்லை. தற்போது சிங்கள ராணுவமே அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு பிறப்பித்துள்ளது.…

Read More

சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்குகிறது

Chennai-Bangalore double decker train service begins பெங்களூர்: 26 ஏப்ரல் 2013: சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடக்கம். சென்னை – பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு ஏசி ரயில் சேவை நேற்று (26 ஏப்ரல் 2013) துவங்கப்பட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த  மாதம் 25ம் தேதி (25 ஏப்ரல் 2013) துவங்கப்பட திட்டமிடப்பட்டு ஒரு மாதம் தாமத்திற்கு பிறகு துவங்கியது. தென் மேற்கு ரயில்வே (South western Railway) அறிக்கையின் படி, தினசரி சுப்பர் பாஸ்ட் (superfast) எக்ஸ்பிரஸ் காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் வந்தடையும். திரும்ப, அது மதியம் 2.40 மணிக்கு பெங்களூரில் இநருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். Chennai-Bangalore double decker train service begins English Summary: The Chennai-Bangalore air…

Read More

பிரபல நடிகர் "பவர் ஸ்டார்" ஸ்ரீனிவாசன் கைது.

Tamil actor Powerstar Srinivasan arrested சென்னை 26 ஏப்ரல் 2013: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது. ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த P.S.ரங்கநாதன் என்பவர் பண மோசடி சம்பந்தமாக அளித்த புகாரின் பேரில்.வெள்ளி மலை ஸ்ரீனிவாசனை (50) கைது செய்ததாக சென்னை போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. மேலும் சுமார் 20 கோடி ருபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக ருபாய் 50 லட்சம் பெற்று வங்கி கடனும் வாங்கித்தராமல் பெற்ற கமிஷனையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் செய்யபட்டுள்ளது. திரு.மணிகண்டனின் இயக்கத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் “கண்ணா லட்டு திங்க ஆசையா”  என்ற தமிழ் படத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. Tamil actor Powerstar Srinivasan arrested Well known Tamil actor ‘Powerstar’ Srinivasan arrested. on Friday…

Read More

தமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.

Tamil nadu tourism new policy சென்னை 26 ஏப்ரல் 2013: தமிழ்நாடு 2011 ல் 14 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (13.67 கோடி உள்நாட்டு பயணிகள் மற்றும் 33 லட்சம் வெளிநாட்டு பயணிகள்). 2012ல் மொத்தம் 18.76 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (உள்நாட்டு பயணிகள் 18.41 கோடி மற்றும் 35 லட்சம் வெளிநாட்டு பயணிகள்) ஆக சுற்றுலா பயணிகளின் சதவீதம் 34 வளர்ச்சி கண்டது. தமிழ்நாடு அரசு புதிய சுற்றுலா கொள்கைகள் உருவாக்கி ஆசிய மேம்பட்டு வங்கியின் {Asian Development Bank (ADB)} உதவியுடன் சுமார் ருபாய் 500கோடியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த புதிய சுற்றுலா கொள்கை அதிகமாக பணம் செலவழிக்கும் பயணிகளை கவரவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீட்டாளர்களை கவரவும் திட்டம் வகுத்து அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

Read More