குஜராத் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு புத்தகங்களுக்கு பதிலாக டேப்லட்ஸ் வழங்கப்பட்டுள்ளது

Govt school beats hazards of heavy schoolbags with tablets தமிழகத்தில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கான பாடங்களை 3 பருவமாக பிரித்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.அத்துடன் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறையில் மாணவர்களின் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.எனினும் பள்ளி மாணவர்களின் புத்தக சுமை பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் இப்போதும் கவலை அடையச் செய்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் (டேப்லட்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.    அதாவது அதிக பாடப்புத்தகங்கள் கொண்ட பைகளை சுமந்து செல்வதற்கு பதிலாக இந்த கையடக்க கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ‘சங்கன்வா’ என்ற பள்ளியில் 5–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு…

Read More

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கொ.நம்மாழ்வார் இயற்கை எய்தினார்

Organic farming scientist Nammalvar passes away முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார். ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாதிரிப் பண்ணை ‘இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்’…

Read More

கடலில் குளிக்கச் சென்ற மக்களை பிரானா மீன் கொடூரமக கடித்ததில் 60 பேர் படுகாயம்டைந்துள்ளனர்

60 hurt in Argentina piranha attack அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ரோசாரியோ நகரைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அங்கிருந்த கடலில் இறங்கி ஆனந்தக் குளியலிட்டுள்ளனர். அப்போது, அங்குக் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் கடலுக்கு உள்ளே இருந்து பிரானா எனப்படும் மனிதர்களைக் கடிக்கும் மீன்கள் வெளிவந்து தாக்கியுள்ளன. என்ன நடக்கிறது என அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், குழந்தைகள் உட்பட அப்பகுதியில் குளித்தவர்களின் உடலைக் கடிக்கத் துவங்கியுள்ளன பிரானாக்கள். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அம்மக்கள் அலறித்துடித்து கடலிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் சிக்கி சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் பல குழந்தைகள் தங்கள் விரல்களை முழுவதுமாக பறி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 hurt in Argentina piranha attack Buenos Aires:  Piranhas on…

Read More

இந்தியாவில் வளமான நகரம் பட்டியலில் சென்னைக்கு இரண்டவது இடம்

இந்தியாவின் வளமான நகரங்களின் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குர்காவுன் உள்ளது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. தற்போது சர்வதேச நிதி நெருக்கடியால் வெளிநாட்டினர் பலர் சிக்கனம் கருதி இந்திய நகரங்களில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களது பட்டியலில் சென்னை உட்பட 7 நகரங்கள் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியால் அந்நாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் உள்ள கிளை அலுவலகங்கள், துணை நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றன. அப்படி மாறுதல் பெறும் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் வசிக்க விரும்புகின்றனர். அவர்களது நாடுகளில் நிலவும் விலைவாசியை ஒப்பிடுகையில் இந்திய நகரங்களில் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளதாக கருதுகின்றனர். எனவே, சென்னை,…

Read More

அனந்தபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி

Sleeping passengers caught in Nanded-Bangalore Express fire; 26 die, 15 injured ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டட்டில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   மின்கசிவால் ரெயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீயால் 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கொத்தசேவூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ரெயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க அனந்தபூர், தர்மாவரத்தில் இருந்து மருத்துவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். எனினும், இந்தத் தீ…

Read More

ஜோத்பூர் மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமானது

High-Level Probe Ordered Into Wastage of 742 Eyes   ஜோத்பூர் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது குறித்து  உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.  ராஜஸ்தான் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் இயங்கி வரும் கண் வங்கியின் 17 வருடத் தகவல்களை வேண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு நபர் விண்ணப்பித்திருந்தார்.  அதன்படி, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தானமாக பெற்ற மொத்த கண்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து கல்லூரியில் இருந்து பெறப்பட்ட தகவல்களை தகவல் ஆணையம் அவருக்கு அனுப்பி வைத்தது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரையில்…

Read More

கணனியை வேகமாக தாக்கி ஃபைல்களை அழிக்கும் கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ்

BEWARE – Cryptolocker ransomware has ‘infected about 300,000 PCs’ 1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது.   கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அநேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே வரும். சில சமயம் உங்கள் நண்பர்கள் பி .சி பாதிகப்ட்டிருந்தால் அதிலிருந்தும் வரலாம். கிரிப்டோ லாக்கர் ஒரு முறை உங்கள் பிசியில் புகுந்தால் என்ன செய்யும். இந்த படத்தில் இருப்பது போல் ஒரு ஸ்லைடு…

Read More

இமாச்சல பிரதேச ஐ கோர்ட்டு ‘ஜங் புட்’ களை விற்க தடை செய்ய உத்தரவு

Himachal HC orders complete ban on junk food items, wafers and Kurkure in state இமாச்சல பிரதேசத்தில் வேப்பர்ஸ் மற்றும் குர்க்குரே பேன்ற `ஜங் புட்’களை விற்க தடை விதிக்க ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மக்காத மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக பேக் செய்யப்படும் உருளை கிழங்கு சிப்ஸ், வேப்பர்ஸ், குர்க்குரே மற்றும் பிற ‘ஜங் புட்’ களை விற்க இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. ஆனால் குடிநீர் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . ஏற்கனவே அம்மாநில அரசால் இது போன்ற பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமிக்க தடை விதிக்கப்பட்டது. ஜூன் 26ம் தேதி இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது.…

Read More

ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த நிதி: விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு

  தில்லி : வரும் டிசம்பர் 28 ஆம் தேதியன்று தில்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கயிருக்கிறார். இந்தநிலையில் அவருடைய கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான புகார் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால் தங்கள் கட்சி சார்பாக நிதி பெற்றது சம்பந்தமான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் தங்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளன என கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த புகார் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அவர் விசாரணையை சந்திக்கவுள்ளார். Home Ministry to inspect accounts of Aam Aadmi Party on foreign funding Home Ministry will soon inspect the books of accounts of Aam Aadmi Party in connection with…

Read More

பீகார் கிராம பஞ்சாயத்தில் திருமணம் அகாத இளம் பெண்கள் கைபேசி பயன்படுத்த தடை

Ban on mobile phones for unwed girls in Bihar panchayat பீகாரில் கிராமங்களில் புதிதல்ல. சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு, பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை என அவ்வப்போது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்படுவது போல் அங்குள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.அதில், ‘திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது’ என ஏக்மனதாக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று பஞ்., தலைவர் அன்சாரி அறிவித்தார்.அதில் ”தடையை மீறி யாரேனும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால் அவர்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்” என தெரிவித்தார். இது…

Read More